Abstract:
கற்கும் திறமை இருந்தும் பல்வேறுபட்ட! காரணங்களால் கற்க முடியாது இருக்கும் மாணவர்களின் ஆங்கில வாசிப்பு மற்றும் எழுத்துத் திறள்களை. விருத்தி செய்து, அவர்களை இடைநிலைக் கல்வியை சிறப்பாக கற்கத் தூண்ட வேண்டும் என்ற நோக்கில் இத் தலைப்பு ஆய்வாளரால் தெரிவு செய்யப்பட்டது. பூகோளமயமாக்கலின் விளைவாக ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இதனால் ஆங்கிலப் பாட அடைவில் இடர்படும் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன்களை மேம்படுத்துவதாக இவ்வாய்வின் நோக்கம் அமைகின்றது. ஆங்கில வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன்களில் பின்தங்கியிருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குப் பொருத்தமான கற்பித்தல் முறைகள், கற்பித்தல் உத்திகள், கற்பித்தல் சாதனங்கள், பயிற்சிகள் போன்றன பயன்படுத்தப்பட்டு, ஆங்கிலப் பாட அடைவு மட்டத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதை இவ்வாய்வின் மூலம் ஆய்வாளர் காட்டுகின்றார்.